/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வட்ட செயலரை மிரட்டிய போதை சிறுவன் கைது
/
வட்ட செயலரை மிரட்டிய போதை சிறுவன் கைது
ADDED : ஜூன் 03, 2024 01:48 AM
கொருக்குப்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சேர்ந்தவர் ஜாவித், 54; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, 48வது வட்டச் செயலர்.
நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டின் எதிரே நின்றிருந்த ஆட்டோவில், இருவர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அவர்களை, ஜாவித் கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லாமல், அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, 'போலீசில் புகார் அளிப்பேன்' என ஜாவித் கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள், 'போலீஸ் எங்களை கைது செய்தால், 15 நாட்களில் வெளியே வந்து விடுவோம். வெளியே வந்து உங்களையும், குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டி விடுவோம்' என, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கொருக்குப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்த, 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.