/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபால் சாம்பியன்ஷிப் பள்ளிகளுக்கு அழைப்பு
/
வாலிபால் சாம்பியன்ஷிப் பள்ளிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 07, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து, ஆறாவது சென்னை சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகின்றன.
எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடக்கின்றன. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளியின் இருபாலர் அணிகளும் பங்கேற்கலாம்; வயது வரம்பு கிடையாது.
விருப்பமுள்ள அணிகள் இம்மாதம் 19ம் தேதிக்குள், chennaidistrictvolleyballassn@gmail.com என்ற இ - மெயிலில் பதிவு செய்யலாம். அல்லது 94448 42628, 98418 16778 என்ற எண்களில் அழைக்கலாம்.