ADDED : ஜூலை 12, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயப்பேட்டை,திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் என்பவர், கோபாலபுரம், கணபதி காலனி முதல் தெருவில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை பூட்டியிருந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை அவ்வழியாக நடந்து சென்றவர்கள் பார்த்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு படையினர், அடுத்தடுத்த வீடுகளில் பரவாமல் தீயை அணைத்தனர்.
சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.