/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புரசைவாக்கத்தில் பயங்கரவாதி பதுங்கலா?
/
புரசைவாக்கத்தில் பயங்கரவாதி பதுங்கலா?
ADDED : பிப் 26, 2025 12:39 AM
சென்னை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அல் பாசித், 42, அளித்துள்ள தகவலின்படி, இவரது கூட்டாளி சென்னை, புரசைவாக்கத்தில் பதுங்கி உள்ளாரா என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர் அல் பாசித். இவர், சென்னை புரசைவாக்கத்தில், தனியார் ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த அல்பாசித்தை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், ஜன.,28ல் கைது செய்தனர்.
சொந்த ஊரிலும், கோவை - திருப்பூரிலும் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்.சில் சேர்த்தது குறித்து இவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் இவருடன் தங்கியிருந்தவரும், இதே வேலையில் ஈடுபட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது; என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.