/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவர்களுக்கான 'சம்மர் கேம்ப்' வனம் குறித்து விளக்கும் 'இஸ்கான்'
/
சிறுவர்களுக்கான 'சம்மர் கேம்ப்' வனம் குறித்து விளக்கும் 'இஸ்கான்'
சிறுவர்களுக்கான 'சம்மர் கேம்ப்' வனம் குறித்து விளக்கும் 'இஸ்கான்'
சிறுவர்களுக்கான 'சம்மர் கேம்ப்' வனம் குறித்து விளக்கும் 'இஸ்கான்'
ADDED : ஏப் 04, 2024 12:35 AM
சென்னை, வனங்கள் வேத வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. தற்போது அவை அழிந்து வருகின்றன. அவற்றின் பெருமைகள், நன்மைகளை சிறார்களுக்கு போதிக்கும் வகையில், 'இஸ்கான்' எனும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இதில், ஆறு முதல் 12 வயது சிறார்களுக்கு, வினாடி - வினாக்கள், ஸ்லோகங்கள், பஜனைகள், தீயில்லா சமையல், கலை மற்றும் கைவினைப் பயிற்சிகள் ஆகியவை கற்பிக்கப்பட உள்ளன.
மேற்கு மாம்பலம், கே.கே.நகர், ஆதம்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், அபிராமபுரம், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில், வரும் 15ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை, தமிழ் மற்றும் ஆங்கில வழியில், முகாம் நடத்தப்படுகிறது.
இந்த சிறப்பு பயிற்சி முகாம், வார இறுதி நாட்களை தவிர்த்து, இரு வாரங்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சிக்கான வீடியோக்கள், கட்டுரைகள், புகைப்படங்கள் உள்ளிட்ட பாடப் பொருட்கள் 'வாட்ஸாப்' வாயிலாக பகிரப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு www.iskconchennai.org/summercamp எனும் இணையதள முகவரியை பார்வையிடலாம்.
அதேபோல, iskconchennaionline@gmail.com என்று இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, இஸ்கான் கோவில் நிர்வாக பிரதிநிதி ரங்க கிருஷ்ண தாஸ் தெரிவித்துள்ளார்.

