/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுற்றுச்சுவரை இடித்து குப்பை கொட்டும் அவலம்
/
சுற்றுச்சுவரை இடித்து குப்பை கொட்டும் அவலம்
ADDED : ஜூன் 26, 2024 12:26 AM

புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் மண்டலம் 77வது வார்டுக்குட்பட்ட புளியந்தோப்பு, பேசின் யானைகவுனி சாலையில், 'சிங்கார சென்னை - 2.0' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாநகராட்சியின் டி.பி.எப்., பூங்கா உள்ளது.
இந்நிலையில், 1,500க்கும் மேற்பட்ட சதுரடியில் உள்ள இப்பூங்காவின் நடைபாதை கற்கள் உடைந்து, நடப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மேலும், பூங்கா அருகே நவீன குப்பை மாற்று வளாகம் உள்ளது. இங்கு அதிகளவு குப்பை கொட்டப்பட்டு, பூங்காவின் சுற்றுச்சுவரையே இடித்து தள்ளியுள்ளனர்.
இதனால், குப்பை கழிவுகள் பூங்காவிற்குள்ளேயே குவிந்துள்ளன. இதனால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
பூங்காவின் எதிரே புதிதாக கட்டப்பட்ட சிறுவர்கள் விளையாட்டு பூங்கா உள்ளது. இதன் ஒரு பகுதி சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கு முன்பே இவ்விரு பூங்காக்களையும் சீரமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிந்து வழக்கமான பணிகள் ஆரம்பித்தும், இவ்விரு பூங்காக்களிலும் எந்த பணியும் துவங்கவில்லை.