ADDED : ஜூன் 17, 2026 11:03 PM
சென்னை: ‘வடசென்னை ஐ.டி.ஐ.,யில் மாணவ – மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
வடசென்னை, அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,யில் 2026 ஆண்டிற்கான, தொழிற் பிரிவுகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இங்கு, தமிழக அரசு, ‘டாடா டெக்னாலஜிʼ நிறுவனத்துடன் இணைந்து, இண்டஸ்ட்ரி – 4.0 டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபாக்சரிங் டெக்னீஷியன் ஓராண்டு பயிற்சியும், மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கிள், டிசைனர் அண்ட் மெர்ச்சுவல் வெரிபையர், அட்வான்ஸ் சி.என்.சி., மிஷின் டெக்னீஷியன் உள்ளிட்ட பிரிவுக்கு, இரண்டு ஆண்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
மேலும், கட்டட பட, இயந்திர பட வரைவாளர், பிளம்பர், வெல்டர், எலக்ட்ரீஷியன், ‘ஏசிʼ மெக்கானிக் உள்ளிட்ட தொழில் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான தகுதி, 10ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. விடுதி வசதி, உணவு, இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகம், சீருடை, வரைபட கருவிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், வரும் 30ம் தேதிக்குள், சென்னை, மின்ட் பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாகவோ அல்லது www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94990 55653, 94990 55658 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
