ADDED : ஜூலை 04, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சேப்பாக்கம், முகமது அப்துல்லா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் உமா, 55; 'எல்காட்' நிறுவன துணை மேலாளர்.
நேற்று காலை, வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றார். மதியம், 3:00 மணியளவில், இவரது வீட்டில் கதவு திறந்து கிடப்பதாக, அருகில் வசிப்போர் தகவல் கூறியுள்ளனர்.
உடனே உமா வீட்டிற்கு சென்று பார்த்த போது, 14 சவரன் நகை, 75,000 ரூபாயை திருடிச் சென்றது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.