/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல சவுக்கு சங்கர் கைதான வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு
/
நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல சவுக்கு சங்கர் கைதான வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு
நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல சவுக்கு சங்கர் கைதான வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு
நீதிபதி சுவாமிநாதன் கருத்து சட்டப்படி சரியானதல்ல சவுக்கு சங்கர் கைதான வழக்கில் 3வது நீதிபதி தீர்ப்பு
ADDED : ஜூன் 11, 2024 05:35 AM
சென்னை: 'பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்காமல், இயற்கை நீதியை மீறும் வகையில், நீதிபதி சுவாமிநாதன் எடுத்த முடிவு, புறக்கணிக்கப்படக் கூடியது; அது, சட்டப்படி இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, விடுமுறை கால நீதிமன்றத்தில், நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. குண்டர் சட்டத்தில் கைது செய்ததை, ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்தபின் வழக்கை இறுதியாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார்.
இறுதி முடிவு ஏற்படாததால், வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு நீதிபதி ஆவணங்களின் அடிப்படையில், தன் முடிவை தெரிவித்துள்ளார்; மற்றொரு நீதிபதி, வழக்கின் தகுதி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால், மூன்றாவது நீதிபதி முடிவு செய்ய, இங்கு இரண்டு மாறுபட்ட கருத்து இல்லை.
'ரிட்' வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நோட்டீஸ் பிறப்பித்துவிட்டால், குண்டர் சட்டத்தில் கைது உத்தரவு பிறப்பித்த அதிகாரிக்கு விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இவ்வழக்கில், அத்தகைய சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் வழங்காமல், நீதிபதி தெரிவித்த முடிவு, தீர்ப்பின் வடிவத்தை இழந்து விட்டது.
ஒரு நீதிபதியின் உத்தரவில் முடிவு இல்லை எனும் போது, இயற்கை நீதியை மீறி, சட்டநடைமுறையை பின்பற்றாமல், மற்றொரு நீதிபதி எடுத்த முடிவை புறக்கணித்து விடலாம்.
பதில் மனுத்தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்க தவறியது; சக நீதிபதியிடம் ஆலோசிக்காமல் அவசரமாக உத்தரவு பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டியதால், நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்து சட்டப்படியாக இல்லை.
எனவே, நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்த கருத்து நீக்கப்பட வேண்டியது. அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இரு தரப்பிலும், ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வில், புதிதாக விசாரணை நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
வரும் 12ம் தேதி, ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.