/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசை
/
காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசை
ADDED : மார் 11, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காமாட்சி அம்மன் கோவில் தேர் திருவிழா விமரிசை
வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காமாட்சி அம்மன் கோவிலில், 21ம் ஆண்டு பிரம்மோத்சவ விழாவில், நேற்று தேர்த்திருவிழா நடந்தது. 18 அடி தேரில் அம்மன் வீதி உலா வந்தார். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்தனர். திருத்தேர், ஜி.ஏ.ரோடு, பாலஅருணாச்சலம் தெரு, தாண்டவராயன் தெரு, பாலு முதலி தெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக வந்து, மீண்டும் கோவிலை அடைந்தது. இன்று திருவிளக்கு பூஜையும்; 12ம் தேதி பொங்கல் விழாவும் நடைபெற உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.