நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கத்தில் நாளை முதல் 4ம் தேதி வரை, கம்ப ராமாயண உபன்யாசம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீ ஏக்நாத் க்ருபா ஸத்ஸங்கம் சார்பில், உலக நன்மைக்காக அவ்வப்போது யாகங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சென்னை, ஆதம்பாக்கம், ஷாவலஸ் காலனியில் உள்ள ராஜ விநாயகர் பக்த மண்டலியில், நாளை முதல் முதல் 4ம் தேதி வரை தினமும் மாலை 6.00 மணி முதல் 8.15 வரை கம்பராமாயண உபன்யாசம் நடக்கிறது.
இதில், கம்பன் கண்ட ராமன், சீதை, அனுமன் ஆகிய தலைப்புகளில், ஆதம்பாக்கம் நடராஜன் ஷியாம் சுந்தர் மூன்று நாட்களும் உபன்யாசம் நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக வித்யா ஷியாம்சுந்தர் குழுவினரின் அபங்க பஜனை நடக்கிறது.