/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிடம் அத்துமீறல் 'காமுக' தந்தை கைது
/
மகளிடம் அத்துமீறல் 'காமுக' தந்தை கைது
ADDED : ஜூலை 06, 2024 12:44 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளான தம்பதிக்கு, 14 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் அரசு பள்ளியில் 9ம் வகுப்பும், மகன் 8ம் வகுப்பும் படிக்கின்றனர்.
குழந்தைகளின் தந்தை, மகனிடம் 'அக்கா பின் வருவார் போ' என சொல்லி பள்ளிக்கு அனுப்பி விட்டு, பெற்ற மகளிடமே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
'இதை யாரிடமாவது சொன்னால், அம்மாவை கொன்று விடுவேன்' என, மிரட்டி வைத்துள்ளார்.
இந்த கொடுமை, கடந்த மாதம் 12ம் தேதி சிறுமியின் தாய் அறிந்துள்ளார். உடனே, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், கொரட்டூரில் பதுங்கி இருந்த நபரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.