/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி மடாதிபதி ராஜகீழ்ப்பாக்கம் விஜயம்
/
காஞ்சி மடாதிபதி ராஜகீழ்ப்பாக்கம் விஜயம்
ADDED : மார் 30, 2024 12:44 AM
சென்னை,நாடு முழுதும் ஆன்மிகத்தை பரப்பவும், வளர்க்கவும் காஞ்சி மடாதிபதிகள் விஜய யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விஜய யாத்திரை சென்று, சமீபத்தில் காஞ்சி சங்கர மடம் திரும்பினார்.
இந்நிலையில், ராஜகீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள காஞ்சி மகாசுவாமி வித்யாமந்திர் பள்ளிக்கு, இன்று மாலை விஜயேந்திரர் விஜயம் செய்கிறார்.
பின், அனுஷ பூஜையில் பங்கேற்று, அருளாசி வழங்குகிறார்.
இந்த வைபத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காஞ்சி மடாதிபதியின் அருளாசியை பக்தர்கள் பெற காஞ்சி மகாசுவாமி டிரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.

