/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி மாநகராட்சி டெண்டர் விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்
/
காஞ்சி மாநகராட்சி டெண்டர் விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்
காஞ்சி மாநகராட்சி டெண்டர் விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்
காஞ்சி மாநகராட்சி டெண்டர் விவகாரம் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார்
ADDED : ஆக 22, 2024 12:38 AM
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமி மீது அதிருப்தி கவுன்சிலர்கள் 33 பேர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயன்றனர். கட்சி மேலிடத்தின் தலையீட்டை அடுத்து, ஜூலை 29ல், தி.மு.க., கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் தீர்மானம் தோல்விஅடைந்தது.
இப்பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து, மாநகராட்சியில் காலியாக இருந்த பணிக்குழு தலைவர் பதவிக்கு, மேயர் அதிருப்தி கவுன்சிலரான, 48வது தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதிருப்தி கவுன்சிலரான கார்த்திக்குக்கு பதவி வழங்கப்பட்டதால், மாநகராட்சி பிரச்னை தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'டெண்டர்' விவகாரத்தில் புதிய பிரச்னை எழுந்து, மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி விபரங்களை முறையாக அறிவிப்பு செய்யவில்லை என, மாநகராட்சி பொறியாளர் கணேசன் மீது, பணிக்குழு தலைவர் கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையிடம் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், தி.மு.க.,- - அ.தி.மு.க., என, 17 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கவுன்சிலர் கார்த்திக் அளித்த புகாரில் மனு விபரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு, கடந்த 16ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால், எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், தனிநபர் ஆதாயம் பெறும் வகையில், மாநகராட்சி பொறியாளர் கணேசன், மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார். ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து, மீண்டும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.