/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கப்பூர் செல்லும் காஞ்சிபுரம் வீரர்கள்
/
சிங்கப்பூர் செல்லும் காஞ்சிபுரம் வீரர்கள்
ADDED : ஆக 31, 2024 12:09 AM

காஞ்சிபுரம், கர்நாடக மாநிலம் மைசூரில், 27வது அகில இந்திய சிட்டோ -ரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 20 மாநிலங்களில் இருந்து 2,000த்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில், காஞ்சிபுரம் பாரத் சிட்டோ- ரியு கராத்தே அகாடமியின் 21 பேர் பங்கேற்றனர். இதில், தாஸ் பிரகாஷ், சாய்கிருஷ், எழிலரசு, கவிதாஸ், சந்தீப் ரோஷன், அனன்யா ஆகிய ஆறு பேர் தங்கம் வென்றனர்.
ஜபின் மாசில், புனீத், ஜஸ்வந்த் ஆகிய மூவர் வெள்ளி; ரோஹித், சஞ்சய்குமார், மேகவர்மன், கலைராஜன், சச்சின் வேலன், மஞ்சுநாத், தலைமை பயிற்சியாளர் பாலா ஆகிய ஏழு பேர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்கள், நவ., மாதம் சிங்கப்பூரில் நடக்கும் ஏசியன் கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கின்றனர்.