/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.12 கோடியில் புதுப்பொலிவு பெறும் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம்
/
ரூ.12 கோடியில் புதுப்பொலிவு பெறும் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம்
ரூ.12 கோடியில் புதுப்பொலிவு பெறும் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம்
ரூ.12 கோடியில் புதுப்பொலிவு பெறும் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம்
ADDED : ஜூலை 15, 2024 02:01 AM

கொடுங்கையூர்:கொடுங்கையூரில், கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து 121ஜி, 121எச், 33பி, 33சி, 37இ, 64கே மற்றும் 2ஏ தடம் எண் கொண்ட பேருந்துகள், வியாசர்பாடி, சென்ட்ரல், எழும்பூர், திருமங்கலம், பல்லாவரம், அண்ணாசதுக்கம், பிராட்வே, அய்யப்பன்தாங்கல், கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், அம்பத்துார், போரூர், பெருங்களத்துார், வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன.
மேலும், கிளாம்பாக்கத்திற்கு இங்கிருந்து 104எச் பேருந்து சென்று வருகிறது. பிரதானமான இந்த பேருந்து நிலையம், பராமரிப்பின்றி மோசமான நிலையில் காட்சியளித்தது.
ஒருபுறம் பேருந்து நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல, லேசான மழை பெய்தாலும் பேருந்து நிலைய நுழைவாயிலில் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, 12 கோடி ரூபாய் செலவில், கண்ணதாசன் நகர் புது பேருந்து நிலையம் கட்ட சி.எம்.டி.ஏ., முடிவெடுத்தது. 25 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், 5,000 சதுரடி பரப்பளவு கொண்ட கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம், தரைத்தளம் மற்றும் முதல் மாடி என, பல்வேறு வசதிகளுடன் அமைய உள்ளது.
தற்போது, முதற்கட்ட பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
ஓராண்டுகளுக்குள் பணிகள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.