/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மிஸ்டர் தமிழ்நாடு' போட்டி கன்னியாகுமரி வீரர் சாம்பியன்
/
'மிஸ்டர் தமிழ்நாடு' போட்டி கன்னியாகுமரி வீரர் சாம்பியன்
'மிஸ்டர் தமிழ்நாடு' போட்டி கன்னியாகுமரி வீரர் சாம்பியன்
'மிஸ்டர் தமிழ்நாடு' போட்டி கன்னியாகுமரி வீரர் சாம்பியன்
ADDED : ஜூன் 18, 2024 12:24 AM

சென்னை, கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க.,வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், இளைஞர் அணி சார்பில், மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டி, ஆலந்துாரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இரு நாட்களாக நடந்த இப்போட்டியில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்து 202 வீரர்கள் பங்கேற்று, கட்டுடலை காட்டி அசத்தினர்.
நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப் போட்டியில், அனைத்து போட்டிகள் முடிவில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மரிய ஜோஸ் முதலிடம் பிடித்து, இரண்டு சவரன் தங்க செயினையும், ரொக்க பரிசையும் வென்றார்.
திருப்பூர் ராஜா, காஞ்சிபுரம் செல்வகுமார், அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, அமைச்சர் அன்பரசன் பரிசுகளை வழங்கினார்.