/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கபாலீஸ்வர் கோவில் 36 கிலோ நகைகள் உருக்க தயார்
/
கபாலீஸ்வர் கோவில் 36 கிலோ நகைகள் உருக்க தயார்
ADDED : மார் 06, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, :மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோவிலில், காணிக்கை, உண்டியலில் கிடைத்த, பயன்படாத, 36.34 கிலோ தங்க நகைகள் உள்ளன.
அதில், போலி கலர் கற்கள், அரக்கு, அழுக்கு, செப்பு சுரைகள் ஆகியவை பிரித்தெடுக்கும் பணிகள், ஓய்வு பெற்ற நீதியரசர் துரைசாமி ராஜு தலைமையில், இரண்டு நாட்களாக நடந்தன.
இந்த பணிகள் முடிந்த நிலையில், மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான, தங்க உருக்காலைக்கு எடுத்து செல்ல, தயாராக வைக்கப்பட்டுள்ளது.