/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாக்டர் மோகனுக்கு 'கெல்லி வெஸ்ட்' விருது
/
டாக்டர் மோகனுக்கு 'கெல்லி வெஸ்ட்' விருது
ADDED : ஜூன் 26, 2024 12:34 AM

சென்னை, நோய் பரவியல் துறையில் ஆற்றிய சேவைக்காக, டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் வி.மோகனுக்கு, அமெரிக்கன் நீரிழிவு அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நீரிழிவு தொடர்பான நிகழ்ச்சியில், டாக்டர் மோகனுக்கு அமெரிக்கன் நீரிழிவு அமைப்பு 2024ம் ஆண்டுக்கான 'கெல்லி வெஸ்ட்' விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.
நோய் பரவியியல் குறித்து, 1,650 ஆராய்ச்சி கட்டுரைகளை டாக்டர் மோகன் வெளியிட்டுள்ளார். அதில், 154 ஆய்வு கட்டுரைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த சேவையை பாராட்டும் விதமாக, இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டாக்டர் மோகன் கூறியதாவது:
அமெரிக்கன் நீரிழிவு அமைப்பின் கெல்லி வெஸ்ட் விருதை பெருவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த அங்கீகாரம் என் குழுவின் கூட்டு முயற்சிகளுக்கும், ஆய்வில் பங்கேற்ற அனைவரது கூட்டு முயற்சிக்கும் ஒரு சான்று.
இந்த மதிப்புமிக்க அமைப்பால் வழங்கப்பட்ட விருது, இந்தியாவில் நான் மேற்கொள்ளும் பணிக்களுக்கான அங்கீகாரமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும், இந்தியானாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நீரிழிவு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.