/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேரள 'சைபர்' குற்றவாளி: ஏர்போர்ட்டில் கைது
/
கேரள 'சைபர்' குற்றவாளி: ஏர்போர்ட்டில் கைது
ADDED : ஆக 24, 2024 12:21 AM

சென்னை,
கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்தவர் 'வில்லன்' ஹிபத்துல்லா, 24. இவர் மீது, டிஜிட்டல் பண மோசடி, மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடியது ஆகிய பிரிவுகளின் கீழ், காசர்கோடு போலீசார், கடந்த மாதம் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் தலைமறைவானார். இவரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, காசர்கோடு போலீசார் அறிவித்தனர்.
மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், எல்.ஓ.சி., எனும் 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, சென்னையில் இருந்து அபுதாபி செல்லும் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணிக்க வில்லன் ஹிபத்துல்லாவும் வந்திருந்தார்.
அவரது பாஸ்போர்ட், அரசு ஆவணங்களை சோதித்த போது, பல்வேறு வழக்குகளில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது, அவர்களுக்கு தெரியவந்தது.
உடனடியாக, அதிகாரிகள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தந்தனர். அவர்கள், கேரள மாநில காசர்கோடு போலீசாருக்கு தகவல் தந்து, குற்றவாளியை நேற்று இரவு ஒப்படைத்தனர்.