/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.4 லட்சம் கஞ்சா கடத்தல் கேரளா வாலிபர் கைது
/
ரூ.4 லட்சம் கஞ்சா கடத்தல் கேரளா வாலிபர் கைது
ADDED : மார் 01, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், செங்குன்றம், எம்.ஏ., நகர் சோதனைச்சாவடியில், செங்குன்றம் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுஇருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும்படி வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட, 'அசோக் லேலண்ட்' மினி சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், 40 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
விசாரணையில், கேரள மாநிலம், எர்ணாகுளம், மரம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தீப், 31, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்ய இருந்ததும் தெரிந்தது.
நான்கு லட்சம் ரூபாய் மதிப்புடைய, 40 கிலோ கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், சந்தீப்பை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.