/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு: முதல்வர் திறப்பு
/
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு: முதல்வர் திறப்பு
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு: முதல்வர் திறப்பு
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு: முதல்வர் திறப்பு
ADDED : ஆக 04, 2024 12:32 AM

கிண்டி,
சென்னையின் மைய பகுதியில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, பாம்பு உள்ளிட்ட 11 வகையான, 46 ஊர்வனங்கள் உள்ளன. ஒன்பது வகையான, 68 பாலுாட்டி உயிரினங்கள் மற்றும் 21 வகையான, 314 பறவை இனங்கள் உள்ளன.
இந்த பூங்காவை மேம்படுத்த, தமிழக அரசு, கடந்த ஆண்டு 20 கோடி ரூபாயை ஒதுக்கியது. தவிர, ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சி.எஸ்.ஐ.ஆர்., எனும் சமூக பொறுப்பு நிதியில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
மொத்தம் 30 கோடி ரூபாயில் அனைத்து பணிகளும் முடிந்து, புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது.
இந்நிலையில், கிண்டி சிறுவர் பூங்கா என்ற பெயரை, கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா எனமாற்றி, முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வன விலங்குகளை மீட்க, காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்க பயன்படும், ஒன்பது நவீன வாகனங்களை கொடியசைத்து துவக்கினார். பின், பேட்டரி வாகனத்தில் பூங்காவை சுற்றிப் பார்த்தார்.
புதுப்பொலிவு பெற்ற பூங்காவை நேற்று, இலவசமாக பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பூங்காவில் அகலம் 7 அடியில் 2 கி.மீ., துாரம் நடைபாதை, நீர்வீழ்ச்சி, வேடந்தாங்கல் போல் பறவைக்கூண்டு, யானை உள்ளிட்ட சிற்பங்கள், விலங்குகள், தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ள விழிப்புணர்வு மையம், செல்பி பாயின்ட், '3டி' அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
தவிர, நுாலகம், இரு உணவகங்கள், மூன்று கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
சீரமைக்கப்பட்ட சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்து யானைகள் குறித்த கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின். உடன் இடமிருந்து தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் மதிவேந்தன், சுப்பிரமணியன் மற்றும் பொன்முடி.