/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் புது கட்டடம் கட்டும் பணி இழுபறி
/
கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் புது கட்டடம் கட்டும் பணி இழுபறி
கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் புது கட்டடம் கட்டும் பணி இழுபறி
கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் புது கட்டடம் கட்டும் பணி இழுபறி
ADDED : ஜூலை 22, 2024 01:40 AM
கோடம்பாக்கம்:கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தை இடித்து விட்டு, புது கட்டம் கட்டட மண் பரிசோதனை நடந்த நிலையில், இன்னும் பணிகள் துவங்காமல் இழுபறி நீடிக்கிறது.
கோடம்பாக்கம் மண்டலத்தில், 127 முதல்- 142 வரை 16 வார்டுகள் உள்ளன. கோடம்பாக்கம் பவர் ஹவுஸ், அம்பேத்கர் சாலையில், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் அமைந்துள்ளது.
இரண்டு மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில், மாநகராட்சியின் பொறியியல், சுகாதாரம், வருவாய், துப்புரவு ஆகிய துறைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள், கட்டட வரைபட அனுமதி உள்ளிட்டவை பெற, நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த மண்டல அலுவலகம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், நெரிசல் நிலவி வருகிறது.
தற்போது, கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மன்ற கூட்டம் நடத்த போதிய வசதிகள் இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் ஓராண்டிற்கு முன், தற்போது உள்ள கட்டடத்தை இடித்து விட்டு, 9 கோடி ரூபாய் மதிப்பில் புது கட்டடம் கட்ட, மண் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆனால், இன்னும் புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்படவில்லை. இதனால், இட நெருக்கடியில் இயங்கி வரும் மண்டல அலுவலகத்தை இடித்து விட்டு, புது கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

