/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.9.50 லட்சம் மோசடி கொடுங்கையூர் நபர் கைது
/
ரூ.9.50 லட்சம் மோசடி கொடுங்கையூர் நபர் கைது
ADDED : மார் 09, 2025 01:26 AM
திரு.வி.க.நகர், பெரம்பூர், எஸ்.ஆர்.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ், 32. இவர், தி.நகரில் நகை பட்டறை மற்றும் ஏலத்தில் போகும் நகைகளை மீட்டு விற்கும், வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு, தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மதனகோபால் என்பவர் மூலம் கொடுங்கையூரைச் சேர்ந்த ஆனந்த், 32, என்பவர் அறிமுகமானார். இவரது 300 கிராம் தங்க நகை, பாடியில் உள்ள சி.சி., வங்கியில் மூழ்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆனந்த், 'நகையை மீட்டு வரும் லாபத்தில், பங்கு பிரித்து கொள்ளலாம்' என, கணேஷிடம் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய கணேஷ், தன்னிடம் இருந்த 9.50 லட்ச ரூபாயை ஆனந்திடம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கொடுத்துள்ளார்.
கணேஷுடன் பெரம்பூரில் உள்ள பெடரல் வங்கி கிளைக்கு சென்று, பணத்தை டெபாசிட் செய்த ஆனந்த், போனில் பேசிக் கொண்டே அங்கிருந்து, 'எஸ்கேப்' ஆகியுள்ளார்.
உடனே கணேஷ், வங்கியில் சென்று கேட்டபோது, டெபாசிட் செய்த பணம், சில நிமிடங்களில் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றலாகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திரு.வி.க.நகர் போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த ஆனந்தை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.