/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூரை இடிந்து விழுந்த கொளத்துார் அரசு பள்ளி
/
கூரை இடிந்து விழுந்த கொளத்துார் அரசு பள்ளி
ADDED : ஆக 18, 2024 12:25 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துாரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கொளத்துார், மேட்டுக்கொளத்துார், கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 38 மாணவ - மாணவியர் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு, 'அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம், சில ஆண்டுகளுக்கு முன், விரிசல் ஏற்பட்டதை அடுத்து, 2022- - 23ல் புதுப்பிப்பு பணிகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று, பள்ளி விடுமுறை என்பதால், மாணவர்கள் வராத நிலையில், காலையில் பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
அப்போது, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வகுப்பறையில் பலத்த சத்தம் கேட்டதை அடுத்து, அங்கு சென்று பார்த்த போது, வகுப்பறை கூரை இடிந்து விழுந்தது தெரிந்தது. இதில், டேபிள், சேர் உள்ளிட்டவை உடைந்து வகுப்பறை முழுதும் சேதமடைந்திருந்தது.
பள்ளி விடுமுறை என்பதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

