/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டரில் புகுந்த கொம்பேறி மூக்கன்
/
ஸ்கூட்டரில் புகுந்த கொம்பேறி மூக்கன்
ADDED : ஜூன் 25, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, குன்றத்துாரைச் சேர்ந்தவர் மனோகர், 35; பெயின்டர். இவர், பருத்திப்பட்டு அருகே ஸ்கூட்டரை நிறுத்தி ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது இருசக்கர வாகனத்தின் இன்ஜின் பகுதியில் கேபிள்களுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்கு தாமதமானது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மெக்கானிக், ஸ்கூட்டரின் முன் பாகங்களை கழற்றி கம்பால் பாம்பை வெளியேற்ற முயற்சித்தார்.
இதில், பாம்பு கம்பால் குத்தப்பட்டு பரிதாபமாக இறந்தது. 5 அடி நீளமுள்ள அந்த பாம்பு 'கொம்பேறி மூக்கன்' என தெரிந்தது.