/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சமையல் பாத்திரம் திருடிய கோணிப்பை திருடன் கைது
/
சமையல் பாத்திரம் திருடிய கோணிப்பை திருடன் கைது
ADDED : ஜூன் 12, 2024 12:20 AM
பேசின்பாலம், சென்னை புளியந்தோப்பு, சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் அருள், 40. இவர், வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் உள்பக்க அறையில் துாங்கி கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை திறந்திருந்த இவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த கோணிப்பையில், சமையல் பாத்திரங்களை அள்ளிப்போட்டு கொண்டு, வெளியே சென்றார்.
அப்போது, அவரை கவனித்த அருள் மடக்கி பிடித்து, பேசின்பாலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அவர், நேபாளத்தைச் சேர்ந்த திர்தார் சர்மா, 31, என்பதும், மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.