ADDED : ஜூன் 26, 2024 12:35 AM
சென்னை, குஹ்ல் ஸ்டைலிஷ் பேன்ஸ், 'குஹ்ல் லக்சஸ் சி5' மின் விசிறியை அறிமுகம் செய்துள்ளது. இது, நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஐந்து நட்சத்திர குறியீடு உடைய மின் விசிறி, குறைந்த மின்சாரத்தில் அதிக திறன் உடையதாக செயல்படும்.
குறைந்த சத்தத்துடன், அதிக காற்றோட்டத்தை வழங்குகிறது.
இந்த மின் விசிறி, 'ஸ்லீக் ஒயிட் பினிஷ், காப்பர், டீக்' மற்றும் பழுப்பு நிறத்தில் கிடைக்கும். அமேசான், பிளிப்கார்ட், 'shop.kuhl.in' ஆகிய தளங்கள் மற்றும் நாடு முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் வாங்கலாம்.
இதுகுறித்து, கென்ட் ஆர்.ஓ., சிஸ்டம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ம கேஷ் குப்தா கூறுகையில், ''தொழில்நுட்ப செயல் திறன் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றின் சரியான கலவையாக குஹ்ல் லக்சஸ் சி5 மின் விசிறியை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்; இது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும்,'' என்றார்.