/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி ஆவணங்களால் நிலமோசடி செய்தவர் கைது
/
போலி ஆவணங்களால் நிலமோசடி செய்தவர் கைது
ADDED : ஆக 08, 2024 12:48 AM

ஆவடி, அயனாவரம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 57. இவர், கடந்த 2009ல், பூந்தமல்லி அடுத்த திருமழிசை அருகே, 800 ச.அடி நிலத்தை, பூந்தமல்லி, குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த கீதா, 51, என்பவரிடம் வாங்கி உள்ளார்.
மூன்று மாதங்களுக்குமுன், ஆனந்தகுமாரின் நிலத்தில் மிருதுளா என்பவர் வீடு கட்டி வருவது தெரியவர, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆனந்தகுமார் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், ஆனந்தகுமாருக்கு 2009ல் நிலத்தை விற்ற கீதா, அதே நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக, கொளஞ்சியப்பன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். கொளஞ்சியப்பன் மோகனா என்பவருக்கும், மோகனா அந்த நிலத்தை மிருதுளா என்பவருக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.
போலி ஆவணங்கள் வாயிலாக நிலமோசடியில் ஈடுபட்ட கீதாவை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று காலை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.