/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாழங்குப்பம் சுடுகாட்டில் கும்மிருட்டு தீப்பந்தம் வெளிச்சத்தில் இறுதி சடங்கு

ADDED : ஜூன் 04, 2024 12:39 AM

எண்ணுார், தாழங்குப்பம் சுடுகாட்டில் தெருவிளக்குகள் எரியாமல் கும்மிருட்டாக இருப்பதால், தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் இறுதி சடங்குகள் நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணுார், தாழங்குப்பம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தர்மா, 31, என்பவர், நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இறுதி சடங்கு, நேற்று மாலை நடைபெற்றது.
தாழங்குப்பம் மயானத்தில், உடல் எரியூட்ட கொண்டு செல்லப்பட்ட நிலையில், எண்ணுார் விரைவு சாலையில் இருந்து, தாழங்குப்பம் சுடுகாடு செல்லும், 300 மீட்டர் துார சாலையும் தெருவிளக்குகள் இல்லாமல், கும்மிருட்டாக இருந்தது.
மேலும், இறுதி சடங்குகள் நடக்கவிருந்த, எரியூட்ட தளத்தை சுற்றியும் தெருவிளக்குகள் ஏதுமில்லாததால், கடும் சிரமம் ஏற்பட்டது.
கைவசம் விளக்குகள் ஏதுமில்லாததால், இறுதி சடங்கிற்கு சென்ற உறவினர்கள், தீப்பந்தம் மற்றும் மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில், இறுதி சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தீப்பந்தத்தின் வெளிச்சத்தில், இறுதி சடங்குகள் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.