/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினம் முன்னணி இசை கலைஞர்கள் பங்கேற்பு
/
ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினம் முன்னணி இசை கலைஞர்கள் பங்கேற்பு
ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினம் முன்னணி இசை கலைஞர்கள் பங்கேற்பு
ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினம் முன்னணி இசை கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 26, 2025 12:16 AM

சென்னை,ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினத்தை முன்னிட்டு, 70க்கும் மேற்பட்ட முன்னணி இசை கலைஞர்கள், ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளை இசைத்தனர்.
பழமையான சபாக்களில் ஒன்றான, 'இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி' சார்பில், ஸ்ரீ தியாகராஜ ஆராதனை தினம், ஆழ்வார்பேட்டையில், கடந்த 22ம் தேதி கொண்டாடப்பட்டது.
இதில், 70க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் பங்கேற்று, ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளை இசைத்தனர்.
முன்னதாக, ஸ்ரீ தியாகராஜருக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது. இந்த விழாவில், இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி தலைவர் ராமசந்திரன் மற்றும் கவுரவ செயலர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பில் நடந்த, தியாகராஜ ஆராதனை தினம் கொண்டாட்டத்தில், முன்னணி இசை கலைஞர்கள் தியாகராஜர் பஞ்சரத்ன கிருதிகளை இசைத்தனர். இடம்: ஆழ்வார்பேட்டை.