/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அத்துமீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை
/
அத்துமீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை
ADDED : ஜூன் 07, 2024 12:25 AM
ஓட்டேரி, பெரம்பூர் நெடுஞ்சாலையில், மஸ்ஜித் இ ஜமாலியா மசூதி இயங்கி வருகிறது. இங்கு, கடந்த மே 15ம் தேதி, காதர் மொய்தீன் என்பவர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஜமாலியா நிர்வாகத்தில் நடக்கும் முறைகேட்டை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதுகுறித்து எம்.ஜே.அலிஜமால் அறக்கட்டளை, அல் - லஜ்னத்து தீனியா வக்பு மற்றும் நரிகுடி ஜமால் அவுல்லியா வக்புகள் ஆகியவை வெளியிட்டுள்ள மறுப்பு வருமாறு:
அறக்கட்டளையின் சொத்துக்களை அபகரிக்கும் எண்ணம் கொண்டவர்களின் துாண்டுதலால், அடையாளம் தெரியாத சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பொருளுதவி செய்வது, அறக்கட்டளையின் நோக்கம். அறக்கட்டளை குழு முறையாக கூட்டம் நடத்தி ஆண்டு வரவு செலவு கணக்குகளை பராமரித்து வருகிறது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறது.
அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்பதும் தவறு. அவதுாறு பரப்பிய காதர் மொய்தீன் என்பவருக்கும், அறக்கட்டளைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
அரபி கல்லுாரி மாணவர்கள் படித்து கொண்டிருந்த போது, வளாகத்திற்குள் நுழைந்து இடையூறு செய்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.