/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் கழிவுநீர் கொட்டிய ஐந்து லாரிகளின் உரிமம் ரத்து
/
கால்வாயில் கழிவுநீர் கொட்டிய ஐந்து லாரிகளின் உரிமம் ரத்து
கால்வாயில் கழிவுநீர் கொட்டிய ஐந்து லாரிகளின் உரிமம் ரத்து
கால்வாயில் கழிவுநீர் கொட்டிய ஐந்து லாரிகளின் உரிமம் ரத்து
ADDED : ஆக 04, 2024 12:51 AM

சென்னை, சென்னையில் லாரியில் ஏற்றிச் செல்லும் கழிவுநீரை, உரிய கட்டணம் செலுத்தி, சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்ற வேண்டும்.
நீர்நிலைகள், வடிகால், கால்வாய்களில் கொட்டக்கூடாது என, லாரி உரிமையாளர்களுக்கு, சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், நீர்நிலைகள் மற்றும் பகிங்ஹாம் கால்வாயில், லாரி கழிவுநீரை கொட்டுவது அதிகரித்து வருகிறது. மடக்கி பிடிக்கும் லாரிகளுக்கு, 25,000 ரூபாய், அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதே செயலை தொடர்ந்து செய்ததால், குறிப்பிட்ட லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய, குடிநீர் வாரியம், சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், 2021 ஜன., 19ம் தேதி வழங்கிய உத்தரவுபடி, முறையே டி.என்:14 ஜெ 7755, டி 3336, எம் 5055, எக்ஸ் 6666, டி.என்: 19 எல் 8365 ஆகிய பதிவு எண் உடைய ஐந்து கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை, ஆர்.டி.ஓ., ரத்து செய்துள்ளார்.
இந்த லாரிகள் சாலையில் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.