/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயிருக்கு அச்சுறுத்தலான 'ஸ்டென்ட்' அகற்றம்
/
உயிருக்கு அச்சுறுத்தலான 'ஸ்டென்ட்' அகற்றம்
ADDED : ஜூலை 04, 2024 12:25 AM

சென்னை, இதய ரத்த நாளங்களில் பொருத்தப்பட்டிருந்த 'இன்ட்ரா கோரோனரி ஸ்டென்ட்' தொற்று காரணமாக அவை அகற்றப்பட்டு, நோயாளிக்கு அப்பல்லோ டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் எம்.எம்.யூசுப் கூறியதாவது:
மாரடைப்பு ஏற்பட்ட 76 வயது நோயாளி ஒருவருக்கு, தனியார் மருத்துவமனையில் 'இன்ட்ரா கோரோனரி ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. அதன்பின், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த போது, ஸ்டென்டில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவை, இதய தமனியை அரித்து, பெருநாடி சுவர் விரிவடையும் அபாயம் இருப்பது தெரிய வந்தது.
இதனால், 60 சதவீதத்துக்கு மேல் நோயாளிக்கு உயிரிழக்கும் சூழல் இருந்தது. எனவே, மிகவும் சிக்கலான மருத்துவ முறையில், 'இன்ட்ரா கோரோனரி ஸ்டென்ட், ரத்த நாளங்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, நோயாளிக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.