ADDED : ஆக 26, 2024 01:54 AM
கொடுங்கையூர்:கொடுங்கையூர் போலீசார், ஆர்.ஆர்.நகர் பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'டி - பிளாக்' அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், அங்கு அதிரடி ஆய்வில் ஈடுபட்ட போலீசார், மதுபானத்தை மொத்தமாக வாங்கி வந்து, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த சசிகுமார், 30, என தெரியவந்தது. அவரிடமிருந்து, 12 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்கு பின், சசிகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மாவா விற்பனை
பெரம்பூர், ஈ.எஸ்.ஐ., சாலையில், ஒரு வீட்டில் குட்கா பொருளான 'மாவா' விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார், அங்கு சோதனை செய்து, 5 கிலோ மாவா, சீவல் பாக்கு மற்றும் ஜர்தா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, பெரம்பூரைச் சேர்ந்த தினேஷ் குமார், 30, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

