தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம்

வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம்

வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம்


ADDED : ஜூன் 14, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் முகாம், ஆவடி மாநகராட்சியில் நாளை துவங்குகிறது.

ஆவடி மாநகராட்சியில் 800க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். சாலையோர புதிய வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் வங்கி கடன் உதவி வழங்கும் முகாம், நாளை முதல் 18ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளன.

ஆவடி மாநகராட்சியில் உள்ள முதல் தளத்தில் நடக்கும் இந்த முகாமில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பான் அட்டை, தொழில் செய்யும் இடத்திற்கான புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கி, புதிய வியாபாரிகள் கடன் உதவி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us