/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவல் நிலையம் அருகே கடைகள் பூட்டு உடைப்பு
/
காவல் நிலையம் அருகே கடைகள் பூட்டு உடைப்பு
ADDED : ஜூலை 26, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், சென்னை, புழல் காவல் நிலையம் எதிரே உள்ள ஜி.என்.டி., சாலையில், ரியல் எஸ்டேட் அலுவலகம், மெக்கானிக் கடை மற்றும் ஜெராக்ஸ் கடை உள்ளிட்டவை உள்ளன.
நேற்று காலை, ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் கடைகளை திறக்க வந்த போது, அலுவலகம், கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே இருந்த எந்த பொருளும், திருடு போகவில்லை எனக் கூறப்படுகிறது.
காவல் நிலையம் எதிரிலேயே, 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ள இப்பகுதியில் திருடர்கள் பூட்டுகளை உடைத்துவிட்டுச் சென்றது, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்த புகாரின்படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.