/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் பாலியல் பலாத்காரம் குருக்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'
/
இளம்பெண் பாலியல் பலாத்காரம் குருக்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'
இளம்பெண் பாலியல் பலாத்காரம் குருக்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'
இளம்பெண் பாலியல் பலாத்காரம் குருக்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'
ADDED : மே 24, 2024 12:06 AM
சென்னை, தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் கோவில் குருக்களுக்கு, 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த, 30 வயது பெண், தனியார் 'டிவி சேனல்' ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், அடிக்கடி பாரிமுனையில் உள்ள, காளிகாம்பாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்போது, அந்த கோவில் குருக்கள் கார்த்திக் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நட்பாக பழகி வந்தனர்.
ஒருநாள் கோவிலில் இருந்து காரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கார்த்திக், தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தாலி கட்டி, உடல், மனரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து, இளம்பெண் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்த்திக்கிடம் புகார் அளித்துள்ளார்.
விருகம்பாக்கம் போலீசார், கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.
இதற்கிடையே, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, கார்த்திக் முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார்.