ADDED : ஆக 23, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை 'ஏ' மற்றும் 'பி' என, இரு மண்டலங்களாக பிரித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'ஏ' மண்டல கல்லுாரிகளுக்கான கூடைப்பந்து போட்டி, குருநானக் கல்லுாரி வளாகத்தில் நடத்தப்பட்டன.
இறுதி போட்டியில், லயோலா மற்றும் இந்துஸ்தான் கலை கல்லுாரி அணிகள் எதிர்கொண்டன.
விறுவிறுப்பான போட்டியின் முடிவில், 60 - 36 என்ற புள்ளிக்கணக்கில் லயோலா அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது.