/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவேரியில் 3 நாளில் மூவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை
/
காவேரியில் 3 நாளில் மூவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை
காவேரியில் 3 நாளில் மூவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை
காவேரியில் 3 நாளில் மூவருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை
ADDED : ஆக 15, 2024 12:13 AM
சென்னை, காவேரி மருத்துவமனையில், மூன்று நாட்களில் தொடர்ச்சியாக மூன்று நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, காவேரி மருத்துவ குழும செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
ஆக., 13ம் தேதி உடல் உறுப்பு தான நாள் அனுசரிக்கப்பட்டு, தானம் அளித்தவர்கள், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கவுரவிக்கப்படுகின்றனர்.
நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை, ஒரு சிக்கலான நுட்பமான செயல்முறை. தமிழகத்தில், ஒரு மாதத்தில் இரண்டு அல்லது அதற்கும் குறைவான நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சைகளே மேற்கொள்ளப்படுகிறது.
அதேநேரம், வடபழனி காவேரி மருத்துவமனையின், டாக்டர்கள் ஸ்ரீனிவாஸ் ராஜகோபால், குமுத் திட்டால், பிரகாஷ், பிரதீப் ஆகயோரின், இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவினர், மூன்று நாட்களில் தொடர்ச்சியாக, மூன்று நோயாளிளுக்கு நுரையீரல் மாற்று சிகிச்சையை செய்துள்ளனர். இதுபோன்ற அறுவை சிகிச்சைகள், மிக நவீன சிகிச்சை பராமரிப்பை நோயாளிகளுக்கு வழங்குவதில், நாங்கள் கொண்டிருக்கும் பொறுப்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.