/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி துரிதம்'
/
'மதுரவாயல் - துறைமுகம் மேம்பால பணி துரிதம்'
ADDED : ஆக 31, 2024 12:19 AM

சென்னை, ''மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுஉள்ளன,” என, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில்பாலிவால் கூறினார்.
சென்னை துறைமுகம்மற்றும் எண்ணுார் காமராஜர் துறைமுகங்களின் நிதி உதவியுடன், தண்டையார்பேட்டை - துறைமுக குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கான, சபோதினி சிறப்பு பள்ளி மற்றும் கைத்திறன் பயிற்சி மையத்தை, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால், நேற்று திறந்து வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளாக, எண்ணுார் காமராஜர், சென்னை துறைமுகம் இணைந்து, பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
சென்னை, தண்டையார்பேட்டையில் முகாம் வழியாக, ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்காக, 2.30 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்டச் சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து இடங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே, அமைக்கப்பட்ட துாண்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, சுனில்பாலிவால் கூறினர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை துறைமுக துணை தலைவர் விஸ்வநாதன், காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குனர் ஐரின் சிந்தியா, சபோதினி தன்னார்வ தொண்டு நிறுவன நிறுவனர் ராதாகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.