/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமல்லை - முதலியார்குப்பம் மகளிர் தின சிறப்பு சுற்றுலா
/
மாமல்லை - முதலியார்குப்பம் மகளிர் தின சிறப்பு சுற்றுலா
மாமல்லை - முதலியார்குப்பம் மகளிர் தின சிறப்பு சுற்றுலா
மாமல்லை - முதலியார்குப்பம் மகளிர் தின சிறப்பு சுற்றுலா
ADDED : மார் 05, 2025 02:52 AM
சென்னை:சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களின் உணர்வுகளை கொண்டாடும் வகையில், மாமல்லபுரம் - முதலியார்குப்பம் இடையே ஒரு நாள் சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா காலை 8:00 மணிக்கு, தமிழக சுற்றுலாத்துறை தலைமை வளாகத்தில் துவங்கும். பயணியர் சொகுசு பேருந்தில், மாமல்லபுரத்தின் புராதன பகுதிகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவர்.
மதிய உணவிற்கு பின், முதலியார் குப்பம் அழைத்துச் செல்லப்படுவர். அங்கு அவர்களுக்கு படகு சவாரி, சாகச விளையாட்டுகள் உள்ளிட்டவை நடத்தப்படும். வெற்றி பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும். பின் பயணியர் அங்கிருந்து, இரவு 8:00 மணிக்கு, சென்னை அழைத்து வரப்படுவர்.
மகளிர் தின ஒரு நாள் சிறப்பு சுற்றுலாவிற்கு, ஒருவருக்கு, 3,150 ரூபாய் கட்டணம். பயணத்தின் போது, உணவு, டீ உள்ளிட்டவை வழங்கப்படும். தற்போது, இச்சுற்றுலாவிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ஆர்வமுள்ளோர், 75500 63121 என்ற வாட்ஸாப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.ttdconline.com இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அழைப்பை ஏற்கவில்லை
இணையவழியில் முன்பதிவு செய்ய முயன்ற சிலர் கூறுகையில், 'முன்பதிவு செய்ய, 75500 63121 என்ற எண்ணிற்கு வாட்ஸாப் வாயிலாக அழைப்பு விடுத்தபோது, அதிகாரிகள் அழைப்பை ஏற்கவில்லை. நேரில் செல்ல இயலாததால் இணைவழியில் விண்ணப்பிக்கிறோம். பின் எதற்கு தொடர்பு எண் வெளியிட வேண்டும்' என்றனர்.