தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மது போதையில் எலிக்கொல்லி மருந்து சாப்பிட்டவர் ‘அட்மிட்’

மது போதையில் எலிக்கொல்லி மருந்து சாப்பிட்டவர் ‘அட்மிட்’

மது போதையில் எலிக்கொல்லி மருந்து சாப்பிட்டவர் ‘அட்மிட்’


ADDED : ஜூன் 03, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குரோம்பேட்டை: மது போதையில், எலிக்கொல்லி மருந்து சாப்பிட்ட ‘ஏசி’ மெக்கானிக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலுார் மாவட்டம், திருப்பதிபுலியூரைச் சேர்ந்தவர் சக்தி, 27. சிங்கப்பூரில் ‘ஏசி’ மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர், ஐந்து மாதங்களுக்கு முன் நாடு திரும்பினார்.

இந்நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள உறவினரை பார்க்க, நான்கு நாட்களுக்கு முன் வந்தார். உறவினர் அறையில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு, மது அருந்தியுள்ளார்.

அப்போது, போதையில் அங்கிருந்த எலிக்கொல்லி மருந்தை எடுத்து, சாப்பிட்டு விட்டார். இதை கவனித்த சாரதி, உடனடியாக சக்தியை, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us