/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது போதையால் வந்த வினை கர்ப்பிணியை தாக்கியவர் கைது
/
மது போதையால் வந்த வினை கர்ப்பிணியை தாக்கியவர் கைது
மது போதையால் வந்த வினை கர்ப்பிணியை தாக்கியவர் கைது
மது போதையால் வந்த வினை கர்ப்பிணியை தாக்கியவர் கைது
ADDED : மார் 08, 2025 12:30 AM
ஓட்டேரி:ஓட்டேரி, மங்களாபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி, 26. கணவரை பிரிந்து, ஓட்டேரி சேமாத்தம்மன் காலனியில் உள்ள தாய் வீட்டில் தங்கியுள்ளார். வீட்டின் சுவற்றில், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெஸ்பன்ராஜ் என்பவர், மது போதையில் சிறுநீர் கழித்துள்ளார். இதை மகாலட்சுமி தட்டிக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த ஜெஸ்பன் ராஜ், கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால், ஜெஸ்பன்ராஜ் மீது மகாலட்சுமி வெந்நீர் ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருதரப்பு புகார் குறித்து, ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஜெஸ்பன்ராஜின் மனைவி, அவரது உறவினர் திவ்யா உள்ளிட்ட சிலர், மகாலட்சுமி வீட்டுக்கு சென்று, அவரையும், மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள அவரது அண்ணன் மனைவி கங்காவையும்,23 தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த கங்கா, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், ஓட்டேரியை சேர்ந்த திவ்யா,49 என்பவரை கைது செய்தனர். ஜெஸ்பன்ராஜின் மனைவி தீபாவை தேடி வருகின்றனர்.