/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரியாணி கடை ஊழியரை தாக்கியவர் கைது
/
பிரியாணி கடை ஊழியரை தாக்கியவர் கைது
ADDED : மார் 04, 2025 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரவள்ளூர்:பெரவள்ளூர், பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் ஜாம்ஷெட், 39. இவர், அதே பகுதியில் ஏ.ஆர்.ரசாக் பிரியாணி கடையில், கடந்த ஓராண்டாக பணிபுரிகிறார்.
கடந்த 2ம் தேதி நள்ளிரவு வாலிபர் ஒருவர், 50 ரூபாய் கொடுத்து பிரியாணி கேட்டுள்ளார். அப்போது பிரியாணி அதிகமாக தர வேண்டும் எனக் கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளார். மீண்டும், 3ம் தேதி மாலை 4:00 மணிக்கு சென்று, ஜாம்ஷெட்டிடம் வீண் தகராறு செய்து 'ஹெல்மெட்'டால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ஜாம்ஷெட், பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து விசாரித்த போலீசார், பெரம்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ஈசாக், 25, என்பவரை, கைது செய்தனர்.