தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரும்பு ராடால் தொழிலாளியை தாக்கியவர் கைது

இரும்பு ராடால் தொழிலாளியை தாக்கியவர் கைது

இரும்பு ராடால் தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 05, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனாம்பேட்டை, ஜூன் 6–

முன்விரோதம் காரணமாக, தொழிலாளியை இரும்பு ராடால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தேனாம்பேட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 31; கட்டுமான தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரியமதன், 28, என்பவருக்கும், ஆட்டோ ஓட்டுவது தொடர்பாக, கடந்தாண்டு பிரச்னை ஏற்பட்டு, முன்விரோதமாக மாறியுள்ளது.

கடந்த 3-ம் தேதி, திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், கூலி பெறுவதற்காக பாஸ்கர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பிரியமதன், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றி, அருகில் கிடந்த இரும்பு ராடால் பாஸ்கரை தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து பிரியமதன் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாஸ்கர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேனாம்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, பிரியமதனை நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us