/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில் விற்றவர் கைது
/
சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில் விற்றவர் கைது
ADDED : மார் 05, 2025 02:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பூக்கடை இன்ஸ்பெக்டர் தலைமையிலான பூக்கடை அமலாக்கப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மண்ணடி, முத்து நாயக்கன் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கொடுங்கையூரைச் சேர்ந்த இளங்கோவன், 55, என்பவர், சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
நேற்று, அவரை கைது செய்த போலீசார், 70 வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.