/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு முன் நிறுத்திய பைக் திருடியவர் கைது
/
வீட்டு முன் நிறுத்திய பைக் திருடியவர் கைது
ADDED : மார் 11, 2025 07:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி:கிண்டி, லேபர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார், 49. இவரது 'டி.வி.எஸ்., ரேடியான்' இருசக்கர வாகனத்தை, 9ம் தேதி வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை பார்த்தபோது, அந்த பைக் திருடு போயிருந்தது. புகாரின்படி, கிண்டி போலீசார் விசாரித்து வந்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத், 19, என்பவர் பைக் திருடியது தெரிந்தது.
நேற்று, அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.