/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது
/
சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது
ADDED : மார் 04, 2025 12:20 AM

எம்.கே.பி.நகர்: கொளத்துார், குமரன் தெருவைச் சேர்ந்தவர் ராமு, 34; 'ஏர்டெல்' பைபர் நெட்வொர்க் நிறுவன மேலாளர். கடந்த பிப்., 18ம் தேதி, வியாசர்பாடி பகுதியில், கேபிள் அறுந்து நெட்வொர்க் பிரச்னைகள் வருவதாக, புகார்கள் வந்தன.
சம்பளம் தராத ஆத்திரத்தில் திருடியவர் கைது
இது குறித்து ராமு நடத்திய விசாரணையில், இணைய கேபிள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த பரத், 23, சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையில், அங்கு பணி செய்த பரத், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் தராததால், அவருக்கு காதலியுடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தம் தடைபட்டுள்ளது.
இதனால், கேபிளை வெட்டி எடுத்து, காயலான் கடையில் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.