/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மஞ்சுளா முனிரத்தினம் கூடைப்பந்து ஆர்.எம்.கே., - டான்பாஸ்கோ பைனல்
/
மஞ்சுளா முனிரத்தினம் கூடைப்பந்து ஆர்.எம்.கே., - டான்பாஸ்கோ பைனல்
மஞ்சுளா முனிரத்தினம் கூடைப்பந்து ஆர்.எம்.கே., - டான்பாஸ்கோ பைனல்
மஞ்சுளா முனிரத்தினம் கூடைப்பந்து ஆர்.எம்.கே., - டான்பாஸ்கோ பைனல்
ADDED : ஆக 04, 2024 12:37 AM

சென்னை,ஆர்.எம்.கே., சீனியர் பள்ளி சார்பில், மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடக்கின்றன.
இதில், 13, 15, 17 வயதினருக்கான பேட்மின்டன், 17 வயதினருக்கான கூடைப்பந்து மற்றும் கால்பந்து, 11, 13 மற்றும் 15 வயதினருக்கான டென்னிஸ், வாட்டர் போலோ, நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன.
சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
பேட்மின்டன் போட்டியில், 13 வயது மாணவியரில் முகப்பேர் எஸ்.பி.ஓ.ஏ., - மாணவரில் பொன்னேரி வேலம்மாள்; 15 வயதில் வேலம்மாள் அனெக்ஸ் மற்றும் எஸ்.பி.ஓ.ஏ.; 17 வயதில் பொன்னேரி வேலம்மாள், சூரப்பேட் வேலம்மாள் ஆகிய பள்ளிகள் முதலிடத்தை பிடித்தன.